பெயர் மாற்றத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்
June 21 , 2018 2695 days 864 0
ஐரோப்பிய நாடுகளான கிரீஸ் மற்றும் மாசிடோனியா நாடுகளானது மாசிடோனியா நாட்டின் பெயரை வட மாசிடோனியக் குடியரசு (Republic of North Macedonia) எனப் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கு ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க துவக்க ஒப்பந்தத்தில் (Historic preliminary agreement) கையெழுத்திட்டுள்ளன.
இதனால் 1991-ஆம் ஆண்டு முதல் இவ்விரு அண்டை நாடுகளுக்கிடையே நிலவி வந்த கசப்பான உறவு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தமானது பிற நாடுகளால் நிலத்தால் சூழப்பட்டுள்ள நாடான (landlocked Country) மாசிடோனியாவை ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ அமைப்பில் இணைவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் துவக்கவும் இறுதியாக அவற்றில் இணையவும் வழி செய்யும்.
இன்னும் இந்த ஒப்பந்தத்திற்கு, மாசிடோனியாவில் வாக்கெடுப்பு (Referendum) மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதல்கள் தேவைப்படுகின்றன.
1991-ஆம் ஆண்டு முதல் கிரீஸ் நாடானது தனது அண்டை நாடான மாசிடோனியாவை அப்பெயர் கொண்டு அழைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஏனெனில் தன்னுடைய நாட்டின் வடக்கத்திய மாகாணத்தின் பெயரும் மாசிடோனியாவே ஆகும். இந்த மாகாணமானது பண்டைய காலத்தில், புகழ்வாய்ந்த கிரேக்க பேரரசில், மாமன்னர் அலெக்ஸான்டரின் தொட்டிலாகும் (Cradle of Alexander). அதனால் இம்மாகாணமானது நவீன கால கிரேக்கர்களின் தீவிர பெருமைக்கான மூல ஆதாரமாக விளங்குகின்றது.