பெய்ஜிங்+30 மதிப்பாய்வு குறித்த ஆசிய-பசிபிக் பிராந்திய அறிக்கை
November 28 , 2024 221 days 245 0
'பாலினச் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தலுக்கான புதிய பாதைகளை வகுத்தல்: பெய்ஜிங்+30 மதிப்பாய்வு குறித்த ஆசிய-பசிபிக் பிராந்திய அறிக்கை' என்ற ஒரு தலைப்பிலான அறிக்கை சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கானத் தளம் ஆனது 1995 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்து பல பரிணாமங்களைக் கண்டுள்ளது.
வடக்கு மற்றும் மத்திய ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் சமூகப் பாதுகாப்புப் பலன்களில் (முறையே 57.4 சதவீதம் மற்றும் 47.0 சதவீதம்) குழந்தைகளுக்குப் (0 முதல் 18 வயது வரை) பயன் மிகு உயர் மட்டப் பலன்களை ஒப்பீட்டளவில் வழங்கியுள்ளன.
இது பிராந்தியச் சராசரியான 18.3 சதவீதத்தை விட அதிகமாகும்.
இந்தியாவில் பாலினம் சார்ந்த வரவு செலவு ஒதுக்கீட்டில் 218% தசாப்த கால அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்தியாவைத் தவிர, பாலினம் சார்ந்த நடவடிக்கைக்கான நிதி ஒதுக்கீட்டினை மிக வெற்றிகரமாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.
பெண்களுக்குப் பயனளிக்கும் முக்கியத் திட்டங்கள் விலக்கப்பட்டதாலும், பாலினம் சார்ந்தப் பகுத்தறியப்பட்டத் தரவு இல்லாததாலும், இந்தியா தனது பாலினம் சார்ந்த நடவடிக்கைக்கான நிதி ஒதுக்கீட்டின் வரையறுக்கப்பட்ட செயல்திறனுடன் போராடி வருகிறது.