பெரிட்டோ மோரேனோ பனிப்பாறை
- அர்ஜென்டினாவின் மிகவும் பிரபலமான 250 சதுர கி.மீ அளவு பரப்பளவைக் கொண்ட பெரிட்டோ மோரேனோ பனிப்பாறை தற்போது இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது.
- சமீபத்தில், 20 மாடி கட்டிடத்திற்குச் சமமான ஒரு பெரிய பனிக்கட்டி சரிந்து, அதன் கீழே உள்ள நீரில் 70 மீட்டர் ஆழத்தில் அது மூழ்கியது.
- இந்தப் பெரிட்டோ மோரேனோ பனிப்பாறையானது 'வெள்ளை இராட்சதர்' என்றும் அழைக்கப் படுகிறது.
- இது அர்ஜென்டினாவின் ஒரு மாகாணமான சாண்டா குரூஸில் உள்ள எல் கலாஃபேட் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.
- இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமான லாஸ் கிளாசியர்ஸ் தேசியப் பூங்காவின் எல்லைக்குக் கீழ் வருகிறது.
- இது சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கடைசிப் பனி யுகத்தின் போது உருவானது.
- இந்த பனிப்பாறையானது சுமார் 30 கிலோ மீட்டர் நீளம் கொண்டது என்றும், இது நீர் மட்டத்திலிருந்து 60 மீ உயரம் கொண்டது என்றும் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
- அதன் மிகப்பெரிய அளவு காரணமாக, இது அர்ஜென்டினாவிற்கு நன்னீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.

Post Views:
33