இந்திய அரசாங்கமானது, உள்கட்டமைப்புத் துறைகளின் இசைவான முதன்மைப் பட்டியலின் கீழ் பெரிய வணிகக் கப்பல்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்தை வழங்கி உள்ளது.
இந்திய உரிமை மற்றும் அந்தஸ்தின் கீழ் மொத்தம் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட டன் கொண்ட வணிகக் கப்பல்கள் தற்போது இந்த அந்தஸ்துக்கு தகுதி பெறுகின்றன.
மொத்தம் 1,500 அல்லது அதற்கு மேற்பட்ட டன் கொண்ட இந்தியாவில் கட்டமைக்கப் பட்ட கப்பல்களும் இதற்கு தகுதி பெறுகின்றன.
உள்கட்டமைப்பு அந்தஸ்து ஆனது, எளிதான வெளிநாட்டு கடன் வாங்குதல், வரி இல்லாத பத்திரங்கள் மற்றும் இந்தியா உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் லிமிடெட் (IIFCL) போன்ற பிரத்தியேகமான கடன் வழங்கு நிறுவனங்களை அணுகுதல் போன்ற நன்மைகளை வழங்குகிறது.
பெரிய கப்பல்கள் ஆனது, தற்போது 38 துணைத் துறைகள் உள்ள இசைவான முதன்மைப் பட்டியலில் போக்குவரத்து மற்றும் தளவாட துணைத் துறையாக சேர்க்கப் பட்டுள்ளன.
கப்பல்களைக் கையகப்படுத்தல் மற்றும் தொழில் வளர்ச்சியை ஆதரிக்க 2025-26 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் 25,000 கோடி ரூபாய் கடல்சார் மேம்பாட்டு நிதி அறிவிக்கப் பட்டது.