2014 UN271 எனும் ஒரு பெரிய வால் நட்சத்திரமானது 2031 ஆம் ஆண்டில் சனிக் கோளின் சுற்றுப்பாதைக்கு மிக அருகில் சூரியனைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தப் பெரிய வால்நட்சத்திரமானது 2014 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட கரும்பொருள் ஆற்றல் ஆய்வின் (Dark Energy Survey) வானியல் கண்டுபிடிப்புகளின் போதுகண்டறியப்பட்டது.
இது 100 முதல் 370 கி.மீ. வரையிலான அகலம் உடையதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
வால்நட்சத்திரங்கள் என்பவை சூரியக் குடும்பத்தின் உருவாக்கத்தின் போது எஞ்சிய பாறை, தூசி மற்றும் பனிக்கட்டிகளால் ஆன உறைந்த பகுதிகளாகும்.