TNPSC Thervupettagam

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் – கடமகுட்டை

September 6 , 2026 7 days 93 0
  • தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடமகுட்டை கிராமத்தில் பல கற் திட்டைகள் மற்றும் கல்வட்டப் புதைகுழிகளுடன் கூடிய பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இந்த இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும், ஏனெனில் இதனைச் சுற்றியுள்ள கட்டமைப்புச் சுவர் இன்னும் காணப்படுகிறது, மேலும் ஈமச்சின்னங்கள் திட்டமிடப் பட்ட வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன.
  • மெருகூட்டப்பட்ட கற்கோடரிகள், மாக்கல் பொருட்கள், அரைக்கும் கற்கள் மற்றும் பிற கல் கருவிகள் உட்பட பல புதிய கற்கால தொல்பொருட்கள் இந்த இடத்தைச் சுற்றி காணப் பட்டன.
  • மூன்று புதிய கற்கால மெருகூட்டும் பள்ளங்களைக் கொண்ட ஒரு பெரிய இயற்கையான பாறை இங்கு கண்டுபிடிக்கப்பட்டது, இது கல் கருவிகளை முடிக்கும் மற்றும் பதப்படுத்தும் செயல்பாடுகளைக் குறிக்கிறது.
  • இந்த இடத்தில் களிமண் உருவங்கள், தேய்க்கும் கற்கள் மற்றும் முதுமக்கள் தாழிகளின் துண்டுகள் ஆகியவை முக்கிய சுற்றுச்சுவருக்கு வெளியே அமைந்துள்ள ஒரு தனித்த கற்திட்டையுடன் காணப்படுகின்றன.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட பெருங் கற்கால ஈமச்சின்னங்கள் உள்ள அதே சமயம் கடமகுட்டையானது புதிய கற்காலத்தில் இருந்து தற்போதைய காலகட்டம் வரையிலான கலாச்சாரத் தொடர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்