அசாமின் திமா ஹசாவ் என்ற மாவட்டத்தில், பல பெருங்கற்கால கல் ஜாடிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.
இந்தக் கண்டுபிடிப்பானது, தென்கிழக்கு ஆசியாவிற்கும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கும் இடையே, கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சில சாத்தியமான தொடர்புகளை எடுத்துரைக்கிறது.
‘அசாம் கல் ஜாடி தளங்கள் குறித்த தொல்பொருள் ஆய்வு’ என்ற தலைப்பில் மூன்று தனித்துவமான வடிவ ஜாடிகள் குறித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
நச்சு பங்க்ளோ என்ற ஒரு இடத்தில், 546 ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அது நமது பூமியின் மிகப்பெரிய இத்தகைய பொருள் கண்டறியப்பட்ட ஒரு தளமாகும்.
லாவோஸ், அசாம் மற்றும் இந்தோனேஷியா ஆகியவற்றுக்கு இடையே உள்ள இந்தக் கலாச்சார உறவைப் புரிந்து கொள்வதற்கு வேண்டி மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு இந்த ஆய்வு வழி வகுத்துள்ளது.
இந்தோனேஷியா மற்றும் லாவோஸ் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இது போன்ற ஜாடிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.