ஏழு பெருநகரங்களில், சராசரியாக ஒரு நாளைக்கு 4.4 மணிநேரம் என்ற பதிவுடன் சென்னையில் அதிகபட்ச காற்றுப் பதனி (ஏர் கண்டிஷனர்) பயன்பாடு பதிவாகி உள்ளது.
சென்னையில் சுமார் 23% வீடுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட காற்றுப் பதனிகள் உள்ளன என்ற நிலையில் இது தேசிய சராசரியை விட சுமார் இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
சென்னையில் அதிக குளிர் பதனூட்டி நிரப்பு விகிதம் உள்ளது என்பதோடு 41% என்ற தேசிய சராசரிக்கும் மேலாக, 50 சதவீதத்திற்கும் அதிகமான காற்றுப் பதனி அலகுகள் ஆண்டுதோறும் மீண்டும் நிரப்பப்படுகின்றன.
ஒவ்வொரு மறு நிரப்பலுக்கும் சென்னையில் சராசரியாக 2,300 ரூபாய் செலவாகிறது என்ற நிலையில் இது நாட்டிலேயே அதிகபட்சமாகும்.
மிகவும் பொதுவான குளிர்பதனப் பொருளான HFC-32 (ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன்-32), கார்பன் டை ஆக்சை டை விட 675 மடங்கு அதிக புவி வெப்பமடைதல் ஆற்றலைக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் குளிர்பதனூட்டி பொருட்களின் கசிவு 52 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான உமிழ்வுகளுக்குப் பங்களித்தது.