பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், பெருநிறுவன சமூகப் பொறுப்பு சார்ந்தப் பல்வேறு நடவடிக்கைகளுக்காக (CSR) செலவிட்ட நிதியானது, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த நிதியாண்டில் 16 சதவீதம் அதிகரித்து 17,967 கோடி ரூபாயாக இருந்தது.
இது 2022-23 ஆம் ஆண்டில் 15,524 கோடி ரூபாயாக இருந்தது.
சுமார் 945.31 கோடி ரூபாய்கள் மதிப்பிலான CSR செலவினத்துடன் HDFC வங்கியானது முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது 900 கோடி ரூபாயும், TCS 827 கோடி ரூபாயும், ONGC 634.57 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளன.
2104 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வந்த CSR சட்டம் ஆனது, அந்த சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்ட, நிறுவனங்கள் தங்கள் நிகர இலாபத்தில் இரண்டு சதவீதத்தை CSR திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
500 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேலான நிகர மதிப்பு அல்லது 1,000 கோடி மற்றும் அதற்கு மேலான வருவாய் அல்லது 5 கோடி மற்றும் அதற்கு மேல் நிகர இலாபம் கொண்ட நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரியான நிகர இலாபத்தில் இரண்டு சதவீதத்தை CSR திட்டங்களில் செலவிட வேண்டும்.