TNPSC Thervupettagam

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்

September 24 , 2026 9 days 180 0
  • தமிழ்நாடு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியது.
  • இந்த விரிவாக்கம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 15.3 லட்சம் மாணவர்களுக்கு பயனளிக்கும்.
  • இத்திட்டம் சென்னை திருவான்மியூரில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப் பட்டு தொடங்கப்பட்டது.
  • நகர்ப்புறங்களில் மையப்படுத்தப்பட்ட சமையலறைகள் மூலமாகவும், கிராமப் புறங்களில் சுய உதவிக் குழுக்கள் (SHGs) மூலமாகவும் காலை உணவு வழங்கப்படும்.
  • இத்திட்டம் முதலில் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடங்கப்பட்டது, பின்னர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.
  • இந்த விரிவாக்கத்திற்கான ₹217.63 கோடி உட்பட மொத்தம் ₹724 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்