பெருந்தொற்றினை எதிர்கொண்ட வெற்றி நிறுவனங்கள் மீதான ஒற்றுமை வரி
April 12 , 2021 1583 days 681 0
பெருந்தொற்றினை எதிர்கொண்ட வெற்றி நிறுவனங்கள் மீதான ஒற்றுமை வரியினை சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் அறிவித்தது.
அதாவது, கோவிட்–19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடி காலங்களில் வளம் பெற்ற நிறுவனங்கள் அக்காலகட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு இணையாக இருக்கும் வகையில் கூடுதல் வரியை செலுத்த வேண்டும்.
இது ஒரு தற்காலிக வரி ஆகும்.
இது சமீபத்திய சுகாதார நெருக்கடியின் போது அதிகரித்த சமூக சமத்துவமின்மையைக் குறைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒற்றுமை வரி (Solidarity tax) 1991 ஆம் ஆண்டில் மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனி ஆகியவை ஒன்றிணைந்த பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது.