TNPSC Thervupettagam

பெருந்தொற்றுக் காலத்தின் கோடீஸ்வரர்கள் (Pandemic Billionaires)

January 18 , 2022 1401 days 609 0
  • ஆக்ஸ்பாம் அமைப்பானது சமீபத்தில் "பெருந்தொற்றுக் காலத்தின் கோடீஸ்வரர்கள்" என்பது பற்றிய தனது அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின்படி, கோவிட் தொற்றுநோயானது கோடிக் கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், சில புதிய கோடீஸ்வரர்களையும் உருவாக்கியுள்ளது.
  • கோவிட்-19 தொற்றுநோய்க் காலத்தின் போது ஆசிய மக்கள் தங்கள் செல்வப் பெருக்கத்தைக் கண்டனர்.
  • இவர்கள் பெரும்பாலும் மருந்துத் துறையை சார்ந்தவர்கள் ஆவர்.
  • ஆசியாவின் ஏழ்மையான 90 சதவீதத்தினருடன் ஒப்பிடுகையில், 1 சதவீதப் பணக் காரர்கள் அதிக செல்வத்தை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்