TNPSC Thervupettagam

பெர்க்லி புவி அறிக்கை

January 22 , 2026 4 days 45 0
  • பெர்க்லி வருடாந்திர புவி வெப்பநிலை அறிக்கை, 2025 ஆம் ஆண்டானது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான லா நினா ஆண்டாகக் கண்டறிந்துள்ளது.
  • லா நினா என்பது எல் நினோ தெற்கு அலைவு (ENSO) நிகழ்வின் குளிரான கட்டமாகும் என்பதோடு இது பொதுவாக உலக வெப்பநிலையைக் குறைக்கிறது.
  • ENSO என்பது பூமத்திய ரேகை பசிபிக் பகுதியில் பதிவாகும் ஏற்ற இறக்கமான கடல் வெப்பநிலையால் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு ஆகும் என்பதோடு இது தெற்கு அலைவு எனப்படும் வளிமண்டல மாற்றங்களுடன் தொடர்புடையது.
  • லா நினாவின் போது, ​​வர்த்தக காற்று வலுப்பெற்று, வெதுவெதுப்பான நீரை மேற்கு நோக்கித் தள்ளி, கிழக்கு பசிபிக் பகுதியில் குளிர்ந்த நீர் மேலுயர அனுமதிக்கிறது.
  • இந்தியாவில், லா நினா பொதுவாக இயல்பை விட அதிகமான பருவ மழையையும், வடக்குப் பகுதிகளில் குளிர்ந்த குளிர்காலத்தையும், வங்காள விரிகுடாவில் வெள்ளம் மற்றும் சூறாவளிகளின் அதிக அபாயத்தையும் தருகிறது.
  • அதன் எதிர் கட்டமான எல் நினோவானது, வர்த்தக காற்றைப் பலவீனப்படுத்துகிறது, கிழக்கு பசிபிக் பகுதியை வெப்பமாக்குகிறது, பருவமழைப் பொழிவை பலவீனப் படுத்துகிறது, வறட்சியைத் தூண்டுகிறது மற்றும் வெப்பமான கோடைகாலத்தை ஏற்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்