TNPSC Thervupettagam

பெலெம் சுகாதாரச் செயல் திட்டம்

September 25 , 2025 15 hrs 0 min 23 0
  • ஜூலை 29 முதல் 31 ஆம் தேதி வரை பிரேசிலில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு பருவநிலை மற்றும் சுகாதாரம் குறித்த உலகளாவிய மாநாட்டில் இந்தியா அதிகாரப் பூர்வமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை.
  • 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள COP30 மாநாட்டில் தொடங்கப் படவுள்ள பெலெம் சுகாதார செயல் திட்டமானது உலகளாவியப் பருவநிலை-சுகாதார செயல்பாட்டு நிரலை வரையறுக்கும்.
  • இந்தியாவின் வளர்ச்சி நலத் திட்டங்கள் பருவநிலை மற்றும் சுகாதாரத்துடன் இணைந்த நன்மைகளுடன் மதிப்பிடக் கூடிய மாதிரிகளை வழங்குகின்றன.
  • பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான் திட்டம் ஆனது சுமார் 1.1 மில்லியன் பள்ளிகளில் 110 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு பயனளித்தது.
  • இது ஊட்டச்சத்து மற்றும் பருவநிலை நெகிழ்திறன் கொண்ட உணவு முறைகளை ஆதரிப்பதற்காக சிறு தானியம் மற்றும் பாரம்பரிய தானியங்களை ஊக்குவிக்கிறது.
  • சுவச் பாரத் அபியான் சுகாதாரம், பொது சுகாதாரம், மனித கண்ணியம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.
  • மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் ஆனது வாழ்வாதாரங்களை ஆதரிக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் சார் பணிகள் மூலம் சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கிறது.
  • பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, வீடுகளில் காணப்படும் காற்று மாசுபாடு மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, தூய்மையான சமையல் எரி பொருளுக்கு மாற உதவுகிறது.
  • இந்தத் திட்டங்கள் எதுவும் பருவநிலைக் கொள்கையாக வடிவமைக்கப்படவில்லை, ஆனால் சுகாதாரம் மற்றும் பருவநிலை சார்ந்த நன்மைகளை வழங்கின.
  • சுகாதாரம் சார்ந்த பருவநிலை நிர்வாகக் கட்டமைப்பு ஆனது மூன்று நிறுவனத் தூண்களை அடிப்படையாகக் கொண்டது.
    • முதல் தூண், பருவநிலைக் கொள்கையை உடனடி சுகாதாரத் தேவைகளுடன் இணைப்பதன் மூலமான உத்தி சார் அரசியல் முன்னுரிமை ஆகும்.
    • இரண்டாவது தூண், அனைத்துத் துறைகளிலும் கட்டாய சுகாதாரத் தாக்க மதிப்பீடுகள் மூலமான நடைமுறை ஒருங்கிணைப்பு ஆகும்.
    • மூன்றாவது தூண், ஆரோக்கியத்தைச் செயலாக்கக் காரணியாகப் பயன்படுத்திச் சமூகங்களை ஈடுபடுத்துவதன் மூலமான பங்கேற்பு சார் செயல்படுத்தல் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்