TNPSC Thervupettagam

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான SOP

February 8 , 2026 9 days 60 0
  • தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) இந்தியாவின் முதல் நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) வெளியிட்டது.
  • 2026 குடியரசு தினத்தன்று ஏற்பட்ட பெருமளவிலான உயிரிழப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான இது " Comprehensive Disaster Victim Identification and Management" என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா விபத்து (அகமதாபாத்), ரசாயன தொழிற்சாலை வெடிப்பு (சங்கரெட்டி, தெலுங்கானா), கம்பீரா பாலம் இடிந்த விபத்து (வதோதரா), திடீர் வெள்ளம் (தாராளி, உத்தரகண்ட்) மற்றும் டெல்லி கார் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பெரிய பேரழிவுகளுக்கு இது பொருந்தும்.
  • இது பின்வரும் நான்கு கட்ட அடையாளச் செயல்முறையை பரிந்துரைக்கிறது: அவை எச்சங்களை மீட்டெடுப்பது, பிரேத பரிசோதனை தரவு சேகரிப்பு, குடும்பங்களிலிருந்து பிரேத பரிசோதனைக்கு முந்தைய தரவு, ஒத்திசைவு மற்றும் முடிவை வெளியிடல்.
  • பல் மருத்துவப் பதிவுகள் பேரழிவுகளில் இருந்து தப்பித்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுவதால், தேசிய பல் மருத்துவத் தரவுப் பதிவேடு பரிந்துரைக்கப் படுகிறது.
  • இந்தச் செயல்முறைத் தரநிலை, பல் மருத்துவம் மற்றும் தொல்லியல் போன்ற தடயவியல் துறைகளை ஒருங்கிணைத்து மனிதாபிமானத் தடயவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது, மேலும் இதில் உள்ள இடைவெளிகளைக் கையாள்வதற்காக நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் பல்வேறு செயல்பாட்டு வழி காட்டுதல்களை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்