TNPSC Thervupettagam

பேரிடர் அபாயக் குறைப்பு மீதான பயிலரங்கம் - இந்தியா மற்றும் ஜப்பான்

March 20 , 2019 2300 days 746 0
  • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே பேரிடர் அபாயக் குறைப்பு (Disaster Risk Reduction) மீதான 3-வது பயிலரங்கமானது புது தில்லியில் நடைபெற்றது.
  • இந்தப் பயிலரங்கத்தின் குறிக்கோளானது பேரிடர் அபாயக் குறைப்புத் துறையில் ஆராய்ச்சி நிறுவனங்கள், நகரங்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றிற்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும்.
  • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பானது
    • ஆரம்ப கால எச்சரிக்கை அமைப்புகள்
    • கட்டமைப்புகள், திறன் வளர்ச்சி ஆகியவற்றில் கட்டமை – பின்னர் - சிறப்பாக மாற்று என்ற அணுகுமுறை
    • அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாடுகள்
    • நிறுவனங்களை வலுப்படுத்துதல்
ஆகிய பகுதிகளில் வலுப்படுத்தப்படுகின்றது.
  • இந்தியாவில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமானது (NDMA - National Disaster Management Authority) பேரிடர் மேலாண்மைக்கான செயல்படுத்தும் நிறுவனமாகும்.
  • NDMA-ன் முதன்மை நோக்கம் இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள், பேரழிவு மீட்பு மற்றும் நெருக்கடி கால நிலை ஆகியவற்றின் திறனை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்