பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான சர்வதேச தினம் - அக்டோபர் 11
October 16 , 2024 314 days 198 0
உயிரினங்கள் மீது பேரிடர்களின் தாக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் முதன்முதலில் 1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அனுசரிக்கப்பட்டது.
பேரிடர் அபாயக் குறைப்பிற்கான சென்டாய் கட்டமைப்பு ஆனது, 2015-30 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான 3வது ஐக்கிய நாடுகள் சபையின் உலக மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இது அனைத்து மட்டங்களிலும் மற்றும் அனைத்துத் துறைகளிலுமான மேம்பாட்டுத் திட்டங்களில் பேரிடர் அபாயத்திற்கான பல இடர் மேலாண்மைக்கு வழிகாட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஹியோகோ நடவடிக்கைக்கான கட்டமைப்பு (HFA) 2005-2015 என்பதின் துணைச் செயற்கருவியாகும்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Role of education in protecting and empowering youth for a disaster-free future” என்பதாகும்.