பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான சர்வதேச தினம் - அக்டோபர் 13
October 17 , 2022 1042 days 370 0
2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு- ‘முன்னெச்சரிக்கை’ என்பதாகும்.
இது "2030 ஆம் ஆண்டிற்குள் மக்களுக்கு பல்வகை ஆபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் பேரிடர் ஆபத்து தகவல் மற்றும் மதிப்பீட்டு வசதிகள் கிடைப்பதையும் அதற்கான அணுகல் வாய்ப்புககள் கிடைப்பதையும் கணிசமாக அதிகரித்தல்" என்ற சென்டாய் கட்டமைப்பின் இலக்கில் கவனம் செலுத்துகிறது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அழைப்பின் பேரில் 1989 ஆம் ஆண்டில் இது தொடங்கப் பட்டது.
2015 ஆம் ஆண்டில், ஜப்பானின் சென்டாய் நகரில் நடைபெற்ற பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான மூன்றாவது ஐக்கிய நாடுகள் உலக மாநாட்டில் சென்டாய் கட்டமைப்பானது வெளியிடப்பட்டது.