பேரிடர் அபாயம் மற்றும் மீள்திறன் மதிப்பீட்டுக் கட்டமைப்பு
October 19 , 2026 6 days 93 0
பேரிடர் மீள்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI) அசாம், குஜராத், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள தொலைத் தொடர்பு கோபுரங்களுக்கான பேரிடர் அபாயங்களை மதிப்பீடு செய்தது.
தமிழ்நாட்டில் உள்ள 48,416 தொலைத்தொடர்பு கோபுரங்களில் 57% அதிக அல்லது மிக அதிக சூறாவளி காற்று அபாயத்தை எதிர்கொள்கின்றன, அதே சமயம் 33% வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன என்று இந்த ஆய்வு கண்டறிந்து உள்ளது.
அசாமில், 18,388 தொலைத்தொடர்பு கோபுரங்களில் 83% மிக அதிக சூறாவளிக் காற்று வீசும் மண்டலங்களில் உள்ளன, 43% அதிக வெள்ள அபாயத்தையும், 5% அதிக நிலச்சரிவு அபாயத்தையும் எதிர்கொள்கின்றன.
தொலைத்தொடர்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (NDMA) இணைந்து இந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
பேரிடர்களின் போது சேவைகளை பராமரிக்க வலுவான கோபுரங்கள், உயர்த்தப்பட்ட மின்னியற்றிகள், மின்கலக் காப்புப் பிரதி, மாற்று தகவல் தொடர்பு வலையமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள் இணைப்புகளை இது பரிந்துரைக்கிறது.