இந்தியாவில் பேரிடர் எச்சரிக்கைகளை மேம்படுத்துவதற்காக தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) ஆகியவை இணைந்து பணியாற்றுகின்றன.
பேரிடர் செய்திகளை அனுப்புவதற்கு அவர்கள் SACHET எனப்படும் ஒருங்கிணைந்த எச்சரிக்கை அமைப்பைப் பயன்படுத்துகின்றனர்.
சில அவசர காலங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த SACHET எச்சரிக்கைகளை SMS ஆக அனுப்புகிறது.
இந்த அமைப்பானது சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) பரிந்துரைத்த பொது எச்சரிக்கை நெறிமுறையை (CAP) பயன்படுத்துகிறது.
எச்சரிக்கை வழங்கீடுகளை மேம்படுத்துவதற்கு, விரைவான செய்தி வழங்கலுக்காக கைபேசி வலையமைப்பு சார் ஒளிபரப்பு (CB) தொழில்நுட்பம் சோதிக்கப் படுகிறது.
நிலநடுக்கங்கள் அல்லது சுனாமி போன்றப் பேரிடர் நிகழ்வுகளின் போது பாதிக்கப் பட்ட பகுதியில் உள்ள அனைத்து தொலைபேசிகளுக்கும் CB எச்சரிக்கை செய்திகளை விரைவாக அனுப்புகிறது.