பேரிடர் தாங்குதிறன் மீதான ஆசிய வளர்ச்சி வங்கியின் அறிக்கை
April 8 , 2019 2408 days 758 0
ஆசிய வளர்ச்சி வங்கியானது சமீபத்தில் “ஆசிய வளர்ச்சிக் கண்ணோட்டம் 2019: பேரிடர் தாங்கு திறனை வலுப்படுத்துதல்” எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, 2016 முதல் 2030 காலகட்டத்தில் வளரும் ஆசியாவில் பேரிடர் தாங்கு திறன் கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்கத் தேவையான முதலீட்டை 26 ட்ரில்லியன் டாலர்களாக மதிப்பிட்டுள்ளது.
ஏனென்றால் ஆசியாவில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களானது இயற்கைப் பேரிடர்களால் மிகவும் பாதிக்கப்பட கூடியவை ஆகும். மேலும் 2000 ஆம் ஆண்டிலிருந்து அது சுமார் 644 பில்லியன் டாலர்கள் அளவிற்கு சேதமடைந்துள்ளன.