நேரு யுவ கேந்திர சங்கதன் (NYKS – Nehru Yuva Kendra Sangathan) தேர்ந்தெடுக்கப்பட்ட பேரிடர் அபாயத்திற்கு உள்ளாகும் மாவட்டங்களில் வட்டார அளவில் பேரிடர் பதிலெதிர்ப்புக் குழுக்களை அமைக்க விருக்கின்றது.
ஒரு பகுதியில் பேரிடர் ஏற்பட்டால் இந்தக் குழுக்கள் “முதலாவது பதிலெதிர்ப்பாளர்களாகச்” செயல்பட இருக்கின்றன.
28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பேரிடர் அபாயத்திற்கு உள்ளாகும் 32 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இந்தத் திட்டத்தை தேசிய பேரிடர் பதிலெதிர்ப்புப் படை (National Disaster Response Force - NDRF) ஒருங்கிணைக்கின்றது.
இதுபற்றி
NYKS என்பது உலகின் மிகப்பெரிய கடைமட்ட அளவிலான ஒரு இளைஞர் அமைப்பாகும்.
இது 1972 இல் உருவாக்கப்பட்டது.
இது மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும்.