பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் – தில்லி
November 6 , 2019
2022 days
758
- தில்லி மாநில அமைச்சரவையானது தேசிய தலைநகர்ப் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
- இது ஒரு தன்னார்வத் திட்டமாகும். மேலும் பெண் பயணிகள் இந்த இலவசப் பயணம் வேண்டாம் என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
- கடந்த ஜூன் மாதத்தில், தில்லியில் இயங்கும் மெட்ரோ மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பயணத்தைத் தில்லி அரசு அறிவித்தது.
- மெட்ரோ ரயில் சேவைகளைப் பொறுத்தவரை மத்திய அரசு அதில் ஒரு பங்குதாரராக உள்ளது. ஆனால் நகரப் பேருந்துகள் தில்லி அரசாங்கத்தின் அதிகார எல்லைக்குள் வருகின்றன.
Post Views:
758