2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பேறுகால தாய்மார்கள் இறப்புகள் பதிவாகியுள்ளன.
பெருந்தொற்று ஏற்பட்ட ஆண்டில் 82,000 பேறுகால தாய்மார்கள் இறப்புகள் பதிவாகிய நைஜீரியாவினைத் தொடர்ந்து 24,000 என்ற எண்ணிக்கையுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இருப்பினும், இந்தியாவில் பதிவான பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதத்தில் ஒட்டு மொத்தமாக 73.5 சதவீதம் குறைந்துள்ளது.
நூற்றாண்டின் தொடக்கத்தில் 384 ஆக இருந்த இந்தியாவின் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதமானது 2020 ஆம் ஆண்டில் 103 ஆக குறைந்திருப்பது மிகப்பெரிய ஒரு முன்னேற்றமாகும்.
மற்ற வளர்ந்து வரும் நாடுகளான அர்ஜென்டினா (45), பூடான் (60), பிரேசில் (72), கிர்கிஸ்தான் (50) மற்றும் பிலிப்பைன்ஸ் (78) ஆகிய நாடுகள் இந்தியாவை விட மிகச் சிறப்பான செயல்திறனைக் கொண்டதாக உள்ளன.
உலகளவில், 2020 ஆம் ஆண்டில் 287,000 பேறுகால தாய்மார் இறப்புகள் பதிவானதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் பதிவான அனைத்து பேறுகால தாய்மார்கள் இறப்புகளில் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியானது 70 சதவிகிதத்தினைக் கொண்டுள்ள நிலையில் பேறுகால தாய்மார் இறப்புகள் ஏழ்மை மிக்க நாடுகள் மற்றும் மோதல் நிறைந்த மண்டலங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.
மேலும், 223 என்ற அளவிலான உலக சராசரியுடன் ஒப்பிடும்போது, மோதல்கள் நிறைந்த நாடுகளில் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் 551 ஆகப் பதிவாகி உள்ளது.