பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் – தமிழ்நாடு
September 14 , 2025 83 days 158 0
2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 100,000 பிறப்புகளுக்கு 38 ஆக இருந்த தமிழ்நாட்டின் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் (MMR) ஆனது 35 ஆகக் குறைந்துள்ளது.
இரண்டும் முறையே 30 MMR விகிதத்தினைக் கொண்டுள்ள கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு தற்போது இந்தியாவில் இரண்டாவது மிகக் குறைந்த MMR விகிதத்தினைக் கொண்டுள்ளது.
2021–2023 ஆம் ஆண்டின் இந்தியாவில் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு குறித்த சிறப்பு தகவல் குறிப்பின் படி, தேசிய MMR ஆனது 100,000 பிறப்புகளுக்கு 88 ஆக உள்ளது.
சமீபத்திய மாநிலச் சுகாதாரத் துறைத் தரவுகளின்படி, 2023 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாட்டின் MMR 45.5 ஆகக் குறைந்துள்ளது.