உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒரு 'சயின்ஸ்டூன்' (sciencetoon) புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இது கோவிட் 19 தொற்றைப் பற்றி விரிவான தகவலைக் கொண்டு இருக்கின்றது
இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் விக்யான் பிரச்சார் என்ற அமைப்பால் வெளியிடப் பட்டது.
லக்னோவின் சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் மூத்த முதன்மை விஞ்ஞானி பிரதீப் ஸ்ரீவஸ்தவா என்பவரால் இந்தப் புத்தகம் எழுதப் பட்டு உள்ளது.
இது கொரோனா வைரஸைப் பற்றிய உலகின் முதல் சயின்ஸ்டூன் புத்தகமாகும்.
'சயின்ஸ்டூன்' என்பது அறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு கார்ட்டூன் ஆகும்.