ஜெய்சால்மரின் மேகா கிராமத்தில் உள்ள ஹர்பாலின் குளத்திற்கு அருகில் கண்டெடுக்கப் பட்ட புதைபடிவ எச்சங்களில் மரம் போன்ற கற்கள் மற்றும் ஒரு பெரிய முதுகெலும்பு அமைப்பு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றின் ஆரம்பக் கட்ட மதிப்பீடுகள் இந்தப் புதைபடிவமானது பிற்கால ட்ரயாசிக் அல்லது ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய ஊர்வன இனங்களின் பாகங்களாக இருக்கலாம் என்று கூறுகின்றன.
தெளிவான முதுகெலும்பு அமைப்பினைக் காட்டுகின்ற இந்தப் புதைபடிவமானது சுமார் 6-7 அடி நீளமும் 3-4 அடி அகலமும் கொண்டது.
ஜெய்சால்மரில் டைனோசர் கால் தடங்கள் மற்றும் 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல் சார் எச்சங்கள் உள்ளிட்ட புதைபடிவங்களின் மிக வளமான வரலாறு உள்ளது.