இந்திய இராணுவம் ஆனது, ஒவ்வொன்றும் 250 சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டுள்ள முதல் ஐந்து பைரவ் லைட் கமாண்டோ படைப் பிரிவுகளை உருவாக்குகிறது.
வழக்கமான காலாட்படை மற்றும் துணை சிறப்புப் படைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காக தற்போதுள்ள காலாட்படை படைப் பிரிவுகளில் இருந்து மொத்தம் 23 பைரவ் படைப்பிரிவுகள் உருவாக்கப்படும்.
மூன்று படைப் பிரிவுகள் ஆனது வடக்கு படைப் பிரிவின் கீழ் செயல்படும் என்பதோடு மேலும் லேவில் 14 படைப் பிரிவிற்கும், ஸ்ரீநகரில் 15 படைப் பிரிவிற்கும், நக்ரோட்டாவில் 16 படைப் பிரிவிற்கும் தலா ஒன்று என அவை நிலை நிறுத்தப்படும்.
பைரவ் பிரிவுகள் ஆனது காலாட்படைப் பிரிவுகளை விட சிறியதாகவும் செயல்பாடு மிக்கதாகவும் இருக்கும் என்பதோடு மேலும் இது மேம்பட்ட ஆயுதங்கள், சாதனங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் கொண்டதாகவும் இருக்கும்.