1998 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதியன்று, இந்திய இராணுவத்தின் பொக்ரான் சோதனைத் தளத்தில் இந்தியா மூன்று அணுகுண்டு சோதனை வெடிப்புகளை நடத்தியது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, மே 13 ஆம் தேதியன்று, மேலும் இரண்டு குண்டுகள் சோதனை செய்யப்பட்டன.
ஆபரேஷன் ஷக்தி என்ற குறியீட்டுப் பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனைகள் ஆனது அணுக்கருப் பிளவு மற்றும் வெப்ப அணுசக்தி ஆயுதங்களை உருவாக்கும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தியது.
1974 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று, இந்திரா காந்தி அவர்களின் ஆதரவுடன், இந்தியா தனது முதலாவது அணுகுண்டு சோதனையை பொக்ரான் சோதனை தளத்தில் நடத்தியது.
பொக்ரான்-I சோதனைக்கு ஆபரேஷன் ஸ்மைலிங் புத்தர் (சிரிக்கும் புத்தர் நடவடிக்கை) என்ற குறியீட்டுப் பெயர் வழங்கப் பட்டது.