சணல் பொருட்களில் கட்டாய பொதி கட்டுதலுக்கான விதிமுறைகளை நீட்டிக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்து உள்ளது.
இம்முடிவின் படி, 100 சதவீத உணவு தானிய மூட்டைகள் மற்றும் 20 சதவீத சர்க்கரை மூட்டைகள் ஆகியவற்றைப் பொதி கட்ட வேண்டி பன்முகப்படுத்தப்பட்ட சணல் பைகள் கட்டாயமாக பயன்படுத்தப்பட வேண்டும் .