TNPSC Thervupettagam

பொது சிவில் சட்ட மசோதா 2026

March 27 , 2026 15 hrs 0 min 67 0
  • உத்தரகாண்டைத் தொடர்ந்து, அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான சட்டத்தை உருவாக்கும் பொது சிவில் சட்ட மசோதாவை (UCC) நிறைவேற்றிய இரண்டாவது மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளது.
  • இந்தச் சட்டம் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்தல்/Live-in உறவுகளைக் கட்டாயப் பதிவு மற்றும் சட்ட நடைமுறைகள் மூலம் ஒழுங்குபடுத்துகிறது.
  • பலதார மணம் போன்ற நடைமுறைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மோசடி அல்லது கட்டாயத் திருமணங்கள் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திற்கு வழி வகுக்கும்.
  • திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்தல்/Live-in உறவுகள் கட்டாயமாகப் பதிவு செய்யப் படுவதால் பெண்களுக்குப் பராமரிப்பு உரிமைகள் உட்பட சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுவதோடு குழந்தைகள் சட்டப்பூர்வமானவர்களாகக் கருதப்படுவார்கள்.
  • ரஞ்சனா தேசாய் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்திலிருந்து பட்டியலிடப்பட்ட பழங் குடியினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • பொது சிவில் சட்டம் பற்றிய கருத்து இந்திய அரசியலமைப்பின் சரத்து 44-இன் கீழ் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்