பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் மாதிரி மருத்துவக் கல்லூரிகள்
December 27 , 2025 6 days 62 0
மத்தியப் பிரதேசத்தின் பழங்குடியின மாவட்டங்களில் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின் கீழ் இந்தியா தனது முதல் மருத்துவக் கல்லூரிகளை அறிவித்தது.
தார், பெதுல், கட்னி மற்றும் பன்னா ஆகிய இடங்களில், ஏற்கனவே உள்ள மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டு நான்கு கல்லூரிகள் அமைக்கப்பட திட்டமிடப் பட்டுள்ளன.
PPP மாதிரி ஆனது அரசு மற்றும் தனியார் துறையின் கூட்டு முதலீடு மற்றும் நிர்வாகத்தை அனுமதிக்கிறது.
அரசாங்கச் சலுகைகளில் செயல்திறன் இடைவெளி நிதி (VGF), இந்திய உள்கட்டமைப்பு திட்ட மேம்பாட்டு நிதி (IIPDF), நீண்ட கால கடன் ஆதரவு மற்றும் 100% வரை வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) ஆகியவை அடங்கும்.
பழங்குடியினப் பகுதிகளில் மருத்துவக் கல்வி மற்றும் பொது சுகாதார சேவைப் பரவலை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.