ஆந்திரப் பிரதேச அரசானது விசாகப்பட்டினத்தில் ஒரு சிறப்பு செயற்கை நுண்ணறிவு (AI) மையத்தை அமைப்பதற்காக டெக் பாரத் அறக்கட்டளையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த முன்னெடுப்பினை ஆந்திரப் பிரதேச அரசின் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை (ITE மற்றும் C) வழிநடத்துகிறது.
சிறப்பு செயற்கை நுண்ணறிவு மையம் (CoE) ஆனது பல நிறுவனங்களால் இணைந்து உருவாக்கப்பட்ட கருவிகள், கொள்கை ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டுத் தீர்வுகள் மூலம் பொது நிர்வாகத்திற்கான செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தும்.