TNPSC Thervupettagam

பொது பருவநிலை நிதி – 2023

July 15 , 2025 3 days 25 0
  • பருவநிலை கொள்கை முன்னெடுப்பு (CPI) என்ற ஆராய்ச்சி குழுவானது, அதன் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பருவநிலை நிதி அறிக்கையை வெளியிட்டது.
  • 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய பருவநிலை நிதியானது ஒரு சாதனை அளவான 1.9 டிரில்லியன் டாலரை எட்டியதாக இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது என்பதோடு இது 2022 ஆம் ஆண்டில் இருந்ததை விட 15% அதிகமாகும்.
  • தணிப்பு மற்றும் ஏற்பு சார்ந்த நன்மைகள் ஆகிய இரண்டையும் கொண்ட நிதியானது 2018 ஆம் ஆண்டு முதல் மூன்று மடங்காக அதிகரித்து, 2023 ஆம் ஆண்டில் 58 பில்லியன் டாலரை எட்டியது.
  • தனியார் நிதியானது முதல் முறையாக சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்பினைத் தாண்டியது.
  • மின்சார வாகனங்கள் (EV) மற்றும் மேற்கூரை சூரிய சக்தி நிறுவல் கொண்ட வீட்டு வசதி முதலீடுகளால் இது இந்த மதிப்பினை எட்டிய அதே நேரத்தில் பெரிய நாடுகளில் நிதி நெருக்கடியின் மத்தியில் பொது நிதி 8% குறைந்தது.
  • பருவநிலை நிதியானது பிராந்திய ரீதியாக அதிகளவில் உள்ளதோடு, 79% ஆனது 89% நிதி உள்நாட்டில் இருந்து பெறப்பட்ட கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் (பெரும்பாலும் சீனா), மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகியவற்றிற்கு வழங்கப்படுகிறது.
  • ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதி மற்றும் பிற உருவெடுத்து வரும் சந்தைகள் மற்றும் மேம்பட்ட நாடுகள் (EMDE) தங்கள் பருவநிலை நிதியில் சுமார் 23% மட்டுமே உள்நாட்டில் இருந்து பெற்றன.
  • EMDE நாடுகளுக்கான சர்வதேச பொது நிதியானது 2018 ஆம் ஆண்டு முதல் சுமார் 196 பில்லியன் டாலராக இரட்டிப்பாக  அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்