பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) திருத்த மசோதா, 2019
September 18 , 2019 2163 days 648 0
கடந்த நிதிநிலைக் கூட்டத் தொடரின் போது (பட்ஜெட்) பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) திருத்த மசோதா, 2019 ஆனது நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த மசோதாவானது பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம், 1971 இல் திருத்தம் செய்கின்றது.
இது அரசாங்கக் குடியிருப்புகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்களை சீராகவும் விரைவாகவும் வெளியேற்ற உதவ இருக்கின்றது.
இது தகுதியான நபர்களுக்கான அரசாங்கக் குடியிருப்பு வசதிகள் கிடைக்கப் பெறுவதை அதிகரிக்கும் என்றும் அவர்கள் அந்த வசதிகளைப் பெறுவதற்கானக் காத்திருப்புக் காலத்தைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.