பொது வளாகங்கள் (அனுமதி பெறாது குடியிருப்பாளர்களின் வெளியேற்றம்) திருத்த மசோதா 2019
August 15 , 2019
2101 days
630
- இது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியால் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த மசோதா 1971ம் ஆண்டின் பொது வளாகங்கள் (அனுமதி பெறாத குடியிருப்பாளர்களின் வெளியேற்றம்) சட்டத்தில் திருத்தம் செய்கின்றது.
- இம்மசோதா ஒரு நபரால் பொது வளாகங்களை ஆக்கிரமித்தல் என்பது அவ்வாறான ஆக்கிரம்பிப்பிற்கான உரிமத்தை வழங்குவதன் மூலம் “குடியிருப்பிற்காகத் தங்குவதற்கான வசதி” என்று வரையறுக்கின்றது.
- இம்மசோதா குடியிருப்பு வளாகங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான நடைமுறையைக் கொண்டிருக்கும் ஒரு விதியை சேர்க்கின்றது.
- ஒரு வேளை குடியிருப்பு வளாகத்தில் அனுமதி பெறாமல் தங்கிய நபர் ஒருவர் சொத்து அதிகாரியால் வெளியிடப்பட்ட வெளியேற்ற ஆணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தால், அவர் அவ்வாறு அங்கு குடியிருக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் இழப்புகளுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
Post Views:
630