TNPSC Thervupettagam

பொது விநியோக திட்டத்தின் கீழ் மாதவிடாய் பயன்பாட்டுப் பொருட்கள்

November 22 , 2025 6 days 41 0
  • ரேஷன் கடைகள் மூலம் மாதவிடாய் காலப் பயன்பாட்டு துணிகளை வழங்குவது குறித்த பொது நல வழக்கிற்கு (PIL) பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசைக் கோரியுள்ளது.
  • இந்த பொதுநல வழக்கு, பொது விநியோக அமைப்பு (PDS) மூலம் இலவச அல்லது மானிய விலையில் மாதவிடாய் காலப் பயன்பாட்டுத் துணிகளை வழங்குவது பற்றியதாகும்.
  • மாதவிடாய் கால வறுமை எனப்படும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக பல பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமற்ற பொருட்களைப் பயன்படுத்துவதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
  • நியாய விலைக் கடைகள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு குறைந்தது ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் 25 மாதவிடாய் காலப் பயன்பாட்டு துணிகளை /சானிட்டரி பேட்களை வழங்க வேண்டும் என்று அது கோரியது.
  • மாதவிடாய் காரணமாக அழுக்குத் துணிகள், காகிதம், திசுக்கள், கந்தல்கள் மற்றும் இலைகளைப் பயன்படுத்துவது 'மாதவிடாய் வறுமை' என்று அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்