தமிழ்நாடு அரசானது, நான்கு ஆண்டுகளில் 789 நிரந்தர மற்றும் 1,605 தற்காலிக கடைகள் உட்பட 2,394 ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் கடைகளை நிறுவியது.
ரேஷன் பொருட்கள் விநியோகத்தை எளிதாக்குவதற்காக UPI பரிவர்த்தனைகள் அறிமுகப் படுத்தப்பட்டன.
2024 ஆம் ஆண்டில் 2.19 கோடிக்கும் அதிகமான அரிசி வழங்கீட்டுக் குடும்ப அட்டை தாரர்களுக்கும், 2025 ஆம் ஆண்டில் 1.94 கோடிக்கும் அதிகமானவர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டன.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஃபெங்கல் புயலுக்குப் பிறகு, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீணாகாத உலர் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.
சென்னை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன.