TNPSC Thervupettagam

பொது விநியோக முறைக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் மேகக் கணினி தளங்கள்

November 23 , 2025 5 days 32 0
  • புதிய டிஜிட்டல் முன்னெடுப்புகள் ஆனது கிடங்குகளை நவீனமயமாக்குவதையும் பொது விநியோக அமைப்பில் (PDS) வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • பந்தாரா 360 என்பது உணவு தானிய இருப்புகளை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்கான ஒரு மேகக் கணினி தளமாகும்.
  • திறன் மிக்க EXIM கிடங்கு இறக்குமதி-ஏற்றுமதி மற்றும் சேமிப்புச் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
  • அன்ன தர்பன் என்பது பொது விநியோக அமைப்பின் செயல்பாடுகளின் திறம் மிக்க கண்காணிப்பு மற்றும் மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த மேகக் கணினி அமைப்பு ஆகும்.
  • ASHA என்பது முன்கணிப்பு திட்டமிடலை மேம்படுத்துவதற்கும், பொருட்கள் வீணாவதைக் குறைப்பதற்கும், விநியோகத் துல்லியத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு செயற்கை நுண்ணறிவு தீர்வாகும்.
  • குஜராத்தின் மலௌட்டில் உள்ள நவீன SILO வசதி, மொத்த அளவிலான சேமிப்பு மற்றும் உணவு தானியங்களின் திறம் மிக்க விநியோகத்தைச் செயல்படுத்துகிறது.
  • இந்த முன்னெடுப்புகள் தளவாடச் செலவுகளைக் குறைப்பதற்கும், வருவாய் நேரத்தைக் குறைப்பதற்கும், பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • மானிய விலையில் கிடைக்கும் உணவு தானியங்கள் திறம் மிக்க முறையிலும், துல்லியமாகவும், கண்ணியமாகவும் குடும்பங்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே இதன் குறிக்கோள் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்