பொது விமானப் போக்குவரத்திற்கான சர்வதேசப் பருவநிலை நடவடிக்கை
May 5 , 2023 826 days 358 0
சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான கார்பன் ஈடாக்கம் மற்றும் குறைப்புத் திட்டம் (CORSIA) மற்றும் நீண்ட கால உயர் இலட்சிய இலக்குகள் (LTAG) ஆகியவற்றில் 2027 ஆம் ஆண்டு முதல் இந்தியா இணைய உள்ளது.
இது சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) முன்னெடுப்பாகும்.
சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பானது அதன் அதிக கவன வழங்கீட்டுப் பிரிவுகளில் ஒன்றாக, சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்துகளில் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்குப் பணிக்கப் பட்டுள்ளது.
சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் சில இலக்குகள், 2050 ஆம் ஆண்டிற்குள் இரண்டு சதவீத வருடாந்திர எரிபொருள் செயல்திறன் மேம்பாடு, கார்பன் நடுநிலைத் தன்மை மேம்பாடு மற்றும் 2050 ஆண்டிற்குள் நிகர சுழிய உமிழ்வு நிலையை அடைதல் ஆகியனவாகும்.
சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பானது இவற்றை CORSIA மற்றும் LTAG ஆகியவற்றின் கீழ் இணைத்துள்ளது.