TNPSC Thervupettagam

பொது விவகாரங்கள் குறியீடு 2020

November 3 , 2020 1741 days 804 0
  • இதை ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான பொது விவகார மையம் வெளியிட்டது.
  • முன்னாள் இஸ்ரோ தலைவரான கஸ்துரிரங்கன் தலைமையிலான ஒரு குழுவால் இது வெளியிடப் பட்டது.
  • வளர்ச்சி, பங்கேற்புத் தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையில் மாநிலங்களின் ஆளுகைத் தன்மையின் மீது பகுப்பாய்வு செய்யப் பட்டது.
  • இதன்படி பெரிய மாநிலங்கள் பிரிவில் சிறப்பாக நிர்வாகம் நடத்தும் மாநிலம் கேரளம் ஆகும்.
  • அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • அதே பிரிவில் உத்தரப் பிரதேசம், ஒடிசா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளன.
  • சிறிய மாநிலங்கள் பிரிவில் கோவா முதலிடத்திலும், மேகாலயா மற்றும் இமாச்சலப் பிரதேசம் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.
  • இந்தப் பிரிவில் இறுதியாக பட்டியலில் உள்ள மாநிலங்கள் மணிப்பூர், டெல்லி மற்றும் உத்தரகாண்ட் ஆகும்.
  • ஒன்றியப் பிரதேசங்களின் பிரிவில் சண்டிகர் முதலிடம் வகிக்கும் பிராந்தியமாக உள்ளது. அதைத் தொடர்ந்து புதுச்சேரி மற்றும் இலட்சத்தீவுகள் உள்ளன.
  • தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஜம்மு-காஷ்மீர் ஆகியவை ஒன்றியப் பிரதேசங்களில் மிகக் குறைவான செயல்திறன் கொண்டவையாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்