மக்களவையில் காங்கிரஸ் தலைவரான ஆதீர் ரஞ்சன் சவுத்ரி மீண்டும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும், மக்களவை சபாநாயகர் பொதுக் கணக்குக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை மீண்டும் அமைப்பார்.
இது பாரம்பரியமாக பிரதான எதிர்க்கட்சியின் பிரதிநிதியால் தலைமை தாங்கப் படுகிறது.
பொதுக் கணக்குக் குழு பாராளுமன்றத்தின் மிக அதிகாரம் வாய்ந்த ஒரு குழுவாகும்.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வழங்கும் அனைத்து அறிக்கைகளையும் பரிசீலித்து அதன் மீது அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளை வழங்க இதற்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.
அரசின் எந்தவொரு கணக்குகள் மற்றும் நிதி ஓட்டம் மற்றும் அதன் முறைகேடு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து அது தொடர்பாக எந்தவொரு அரசாங்க அதிகாரிகளையும் தனியார் நபர்களையும் விசாரிக்க அழைப்பாணை விடுத்து அதனை இந்தக் குழு ஆராயலாம்.
எந்தவொரு விஷயத்தையும் தேர்வு செய்து அதனை விவாதிக்க இதன் தலைவருக்கு அதிகாரம் இருந்தாலும், அதில் உள்ள வாக்களிக்கும் முறை ஆளும் கட்சிக்கு அவ்வறிக்கையின் மீதான முடிவுகளை எடுக்க உதவுகிறது.