TNPSC Thervupettagam

பொதுக் கணக்குக் குழுவின் 100வது ஆண்டு நிறைவு

December 20 , 2021 1326 days 1423 0
  • பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு  அது நிறுவப்பட்டதன் 100வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகிறது.
  • மான்ட்ஃபோர்டு சீர்திருத்தங்கள் எனவும் அழைக்கப்படும் 1919 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தில் இது பற்றி குறிப்பிட்டதைத் தொடர்ந்து 1921 ஆம் ஆண்டில் பொது கணக்குக் குழு அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்தக் குழுவானது இந்தியப் பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் சமர்ப்பிக்கும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் வருடாந்திரத் தணிக்கை அறிக்கைகளை மதிப்பீடு செய்யும் பாராளுமன்றக் குழுக்களில் ஒன்றாகும்.
  • தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்கள் சமர்ப்பிக்கும் 3 அறிக்கைகள் என்பவை
    • பங்கீட்டுக் கணக்குகள் மீதான தணிக்கை அறிக்கை
    • நிதிக் கணக்குகள் மீதான தணிக்கை அறிக்கை
    • பொதுத் துறை நிறுவனங்கள் மீதான தணிக்கை அறிக்கை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்