இந்திய அரசானது சமீபத்தில் 2017 ஆம் ஆண்டின் பொதுக் கொள்முதல் ஆணையைத் திருத்தியுள்ளது.
சீன முதலீட்டைக் குறைக்க இந்தத் திருத்தம் செய்யப் பட்டுள்ளது.
இந்தத் திருத்தம் இப்போது துறைகள் மற்றும் அது சார்ந்த அமைச்சகங்களுக்கு வகுப்பு 1 மற்றும் வகுப்பு 2 என்ற உள்ளூர் வழங்குநர்களுக்கு அதிக உள்ளூர் உள்ளடக்கத் தேவையை (local content requirement) அறிவிக்க உதவுகிறது.
முன்னதாக வகுப்பு 1 மற்றும் வகுப்பு 2 உள்ளூர் வழங்குநர்களின் பங்கு முறையே 50% மற்றும் 20% என நிர்ணயிக்கப் பட்டிருந்தது.
வகுப்பு 1 உள்ளூர் வழங்குநர் என்பவர் தனது பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றைக் கொள்முதல் மேற்கொள்வதற்கு உள்ளூர் உள்ளடக்க அளவினை 50% என்ற அளவை விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ கொண்டு இருக்கும் ஒரு வழங்குநர் ஆவார்.
இப்போது இந்தத் திருத்தத்தின் மூலம் உள்ளூர் உள்ளடக்கத் தேவையை 50% க்கும் அதிகமாக அமைச்சகம் அறிவிக்க முடியும்.