அதன் பொதுச் சேவை முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் ஜன் பிரசாரன் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த அனுசரிப்பு, 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதியன்று அகில இந்திய வானொலியில் M.K. காந்தியின் முதல் மற்றும் ஒரே நேரடி ஒளிபரப்பை நினைவு கூரும் வகையில் அமைந்துள்ளது.
புது டெல்லியில் உள்ள ஒலிபரப்பு அலுவகலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒலிபரப்பு மூலம் குருக்ஷேத்ரா முகாமில் தங்கியிருந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளிடம் காந்தி உரையாற்றினார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சுதந்திர கருத்து ஒலிபரப்பில் உஷா மேத்தாவின் பங்கையும் இந்த நாள் நினைவு கூருகிறது.
உஷா மேத்தா 1942 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதியன்று பம்பாயில் கைது செய்யப் பட்டார் என்பதோடுமேலும் அவர் இயக்கிய நிலத்தடி அல்லது ரகசிய ரேடியோ ஒலி பரப்பியும் அதே நாளில் பறிமுதல் செய்யப்பட்டது.