பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) மசோதா, 2024
February 13 , 2024 546 days 464 0
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) மசோதாவானது, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு முறைகளில் அதிக வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நம்பகத் தன்மையை கொண்டு வருவதற்காக, "முறைகேடுகளை" தடுப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
மசோதாவின் 3வது பிரிவு ஆனது, பொதுத் தேர்வுகளில் "பணம் சார்ந்த அல்லது தவறான ஆதாயத்திற்காக" நியாயமற்ற வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்சம் 15 செயல்களைப் பட்டியலிடுகிறது.
இந்த செயல்களில் பின்வருவன அடங்கும்:
வினாத்தாள் அல்லது விடைக்குறிப்பு அல்லது அதன் ஒரு பகுதி வெளியாதல் மற்றும் அத்தகைய வெளியாதல் மோசடியில் கூட்டு சேர்தல்
அங்கீகாரம் இல்லாமல் வினாத்தாள் அல்லது ஒளிக்குறி உணரிப் பதிலளிப்புத் தாளை அணுகுதல் அல்லது கையகப்படுத்துதல்”;
ஒளிக்குறி உணரிப் பதிலளிப்புத் தாள்கள் உள்ளிட்ட விடைத்தாள்களைச் சிதைத்தல்
பொதுத் தேர்வின் போது அங்கீகரிக்கப்படாத நபரால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்குதல் மற்றும்
பொதுத் தேர்வில் தேர்வர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுதல்.
இந்த மசோதாவின் 9வது பிரிவு ஆனது, அனைத்து குற்றங்களும் பிடியாணையற்ற, பிணையில் வெளி வர முடியாத மற்றும் கூட்டுப்படுத்த முடியாத குற்றங்கள் என்று கூறுகிறது.
"முறைகேடுகள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் அல்லது நபர்களுக்கும்" மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப் படலாம்.