சென்டியன்ட் AI நிறுவனமானது, ஒரு பொதுப் பயன்பாட்டுச் செயற்கைப் பொது நுண்ணறிவு (AGI) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தளம் 40க்கும் மேற்பட்ட சிறப்பு செயற்கை நுண்ணறிவு முகவர்கள், 50 தரவு மூலங்கள் மற்றும் 10+ AI மாதிரிகளை ஒரே வலையமைப்பில் ஒருங்கிணைத்து, நிகழ் நேர ஒத்துழைப்பு மற்றும் சிக்கலான பணிச் செயல்பாடுகள் செயல்படுத்தலைச் செயல்படுத்துகிறது.
இந்தத் தளமானது Base, Binance Coin (BNB), Polygon, Arbitrum, Celo மற்றும் Near உள்ளிட்ட பல தொடர் சங்கிலித் தொழில்நுட்பம் முழுவதும் பயன்படுத்தப்படும் சூழல் அமைப்பு முகவர்களை ஆதரிக்கிறது.
சென்டியன்ட் நிறுவனம் ஒரு டோக்கன் அடிப்படையிலான ஊக்க மாதிரியைப் பயன்படுத்துகிறது என்பதோடு இது வழக்கமான Pay-per-API மாதிரிகள் போல் இல்லாமல் மாறாக நிரல் உருவாக்க நிபுணர்களுக்கு உரிமைப் பங்குகள் மற்றும் லாபத்தை வழங்குகிறது.
இந்தப் புத்தொழில் நிறுவனம் ஆனது AGI தளத்தினை பொதுப் பயன்பாடு மூலமாகவும் எந்த ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலிருந்தும் விடுபட்டதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.