TNPSC Thervupettagam

பொருநை தொல்பொருள் அருங்காட்சியகம்

December 23 , 2025 3 days 145 0
  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அருகே அமைக்கப்பட்டுள்ள பொருநை தொல்பொருள் அருங்காட்சியகத்தைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
  • 2021 ஆம் ஆண்டில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் 56.36 கோடி ரூபாய் செலவில் 13 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகலை மற்றும் கொற்கை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி ஆகியவற்றிலிருந்துத் தோண்டி எடுக்கப் பட்ட கலைப்பொருட்கள் இதில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
  • காட்சிகளில் முதுமக்கள் தாழிகள், இரும்புக் கருவிகள், வெண்கலம் மற்றும் தங்க ஆபரணங்கள், நாணயங்கள், மட்பாண்டங்கள் மற்றும் தமிழி (பண்டையத் தமிழ் எழுத்து) எழுத்துக்களைக் கொண்ட கலைப்பொருட்கள் ஆகியவை அடங்கும்.
  • கார்பன் கதிரியக்கக் கால கணிப்பு ஆனது சிவகளையில் கிமு 3300 மற்றும் ஆதிச்ச நல்லூரில் கிமு 2613 ஆம் ஆண்டில் தமிழர்கள் இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தச் செய்ததைக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்