அறிவியலுக்கான ராயல் ஸ்வீடிஷ் அகாடமியானது ஆல்பிரட் நோபலின் நினைவாக பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசை வழங்க முடிவு செய்துள்ளது.
இந்தப் பரிசின் ஒரு பாதியானது அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் கார்டு அவர்களுக்கு "தொழிலாளர் பொருளாதாரத்தில் அவரது அனுபவப் பூர்வப் பங்களிப்புகளுக்காக" வழங்கப்பட்டு உள்ளது.
மற்றொரு பாதியானது ஜோசுவா ஆங்கிரிஸ்ட் (அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) மற்றும் கைடோ இம்பென்ஸ் (அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கு "for their methodological contributions to the analysis of causal relationships" (ஒப்பந்த உறவுமுறைகளுக்கான ஆய்வுகளுக்கு தங்களது முறையான பங்களிப்புகள்) என்ற கருத்திற்காக வழங்கப்படுகிறது.
1968 ஆம் ஆண்டில், ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் (ஸ்வீடனின் மத்திய வங்கி) ஆனது நோபல் பரிசின் நிறுவனர் ஆல்ஃபிரட் நோபலின் நினைவாகப் பொருளாதார அறிவியலுக்கான பரிசை நிறுவியது.
பொருளாதார அறிவியலில் முதல் பரிசானது ராக்னர் ஃபிரிஷ் மற்றும் ஜான் டின்பெர்கனுக்கு 1969 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.