October 14 , 2025
14 hrs 0 min
45
- இது அதிகாரப்பூர்வமாக பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு என்று அழைக்கப் படுகிறது.
- பொருளாதார அறிவியலுக்கான 2025 ஆம் ஆண்டின் நோபல் நினைவு பரிசு ஆனது ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- "புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக" இந்த மூவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- பரிசின் பாதி மதிப்பானது "தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன் நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக" மோகிருக்கு வழங்கப்படும்.
- மற்றொரு பாதி "படைப்பாக்கத்தினால் ஏற்படும் அழிவின் மூலமான நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக" அகியோன் மற்றும் ஹோவிட்டிற்கு கூட்டாக வழங்கப்படுகிறது

Post Views:
45